வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் Bad Girl டீசர் வெளியீடு

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார்.
வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் Bad Girl டீசர் வெளியீடு
Published on

பிரபல இந்தி இயக்குனர் மற்றும் நடிகராவார் அனுராக் காஷ்யப். இவர் சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் மலையாள திரைப்படமான ரைஃபில் கிளப் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு Bad Girl என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com