ஆயிரத்தில் ஒருவன்-2 பண்ற ஆசை வெறித்தனமா இருக்கு- செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன்-2 பண்ண வேண்டும் என்றால் அது கார்த்தி இல்லாமல் முடியாது.ரசிகர்கள் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி ஆயிரத்தில் ஒருவர் 2ம் பாகம் எப்போது எடுப்பீர்கள் என்றுதான்.
ஆயிரத்தில் ஒருவன்-2 பண்ற ஆசை வெறித்தனமா இருக்கு- செல்வராகவன்
Published on

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2ம் பாகம் எடுப்பது தொடர்பாக இயக்குனர் செல்வராகன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

காலம் கடந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடும்போது எனது மனநிலை வெறுமையாக தான் இருக்கிறது.

திரையரங்குகளில் பார்வையாளர்கள் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்கள். அப்படி ஒரு சூழலில் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இன்றைக்கும் நான் வெளியில் செல்லும்போது ரசிகர்கள் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி ஆயிரத்தில் ஒருவர் 2ம் பாகம் எப்போது எடுப்பீர்கள் என்றுதான்.

ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் தனுஷூம் நானும் ஒரு வாரமாக ஆலோசித்து முடிவு செய்தோம். ஆனால் இதில் நாங்கள் செய்த தவறு படம் குறித்து முன்கூட்டியே அறிவித்தது தான்.

ஆயிரத்தில் ஒருவன்-2 பண்ண வேண்டும் என்றால் அது கார்த்தி இல்லாமல் முடியாது. அந்த உலகத்தை நான் திருப்பிக் கொண்டு வரவேண்டும். அந்த சமூகம் அதிகளவில் இருக்கும். அது ஒரு கடினமான கதையாக இருக்கும். அதற்கு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். நடிகர்கள் ஒரு ஆண்டுக்கு கால் ஷீட் ஒதுக்க வேண்டும் போன்ற நிறைய விஷயங்கள் உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன்-2ம் பாகம் எடுக்க வெறித்தனமான ஆசை இருக்கு. ஆனால் அதற்கு எல்லாம் கைக்கூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com