அரசன் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் - போஸ்டர் வெளியிட்டு அறிவித்த வெற்றிமாறன்

'அரசன்' படத்தின் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படுகிறது.
அரசன் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் - போஸ்டர் வெளியிட்டு அறிவித்த வெற்றிமாறன்
Published on

நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.

இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 'அரசன்' படத்தின் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது.

முன்னதாக, இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படுகிறது. குறிப்பிட்ட திரையரங்குகளில் டிக்கெட் கட்டணமாக ரூ.15 செலுத்தி ப்ரோமோவைக் காணலாம்.

இந்நிலையில், அரசன் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com