அப்பல்லோ மருத்துவமனையில் அஜித் 'திடீர்' அனுமதி

நடிகர் அஜித்துக்கு நேற்று முன்தினம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனையில் அஜித் 'திடீர்' அனுமதி
Published on

சென்னை:

நடிகர் அஜித்துக்கு நேற்று முன்தினம் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. விழாவுக்கு குடும்பத்துடன் சென்ற அஜித் நேற்று மாலை சென்னை திரும்பினார்.

இந்நிலையில் நடிகர் அஜித் இன்று காலை திடீரென ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவரது தரப்பில் விசாரித்தபோது, நடிகர் அஜித் பத்மபூசன் விருது பெறுவதற்காக டெல்லிக்கு சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி கடந்து சென்றார்.

இந்த நிலையில் காயம் காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com