படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

சுட சுட தோசை. அதுவும் ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட தோசை. வீடியோ காட்சிகளை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், தெலுங்கு, சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென படப்பிடிப்பு தளத்தில் சமையல் பகுதிக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பில் பங்கேற்றோருக்கு தோசை சுட்டு பரிமாறினார்.

தோசை, தோசை வேண்டுமா? வேண்டுமா? என கூவி, கூவி அழைத்து அனைவருக்கும் தனது கையால் சுட சுட சுட்டுக் கொடுத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சுட சுட தோசை. அதுவும் ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட தோசை. கேட்க வா வேண்டும் மேடம். எனக்கு மேடம் எனக்கு என போட்டி போட்டு 'தோசை'யை சுவைத்து மகிழ்ந்தனர் படக்குழுவினர்.

அப்போது எடுத்த வீடியோ காட்சிகளை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com