'சிக்ஸ் பேக்' முயற்சி பண்ணாதீங்க... இளைஞர்களுக்கு, பரத் அறிவுரை

'சிக்ஸ் பேக்' வைக்க நிறைய தியாகம் செய்யவேண்டும். சிக்ஸ் பேக் வைக்க மெனக்கெட வேண்டும்.
'சிக்ஸ் பேக்' முயற்சி பண்ணாதீங்க... இளைஞர்களுக்கு, பரத் அறிவுரை
Published on

சிக்ஸ் பேக் என்பது விபரீதமான முயற்சி தான். இதை பலமுறை நான் வலியுறுத்தி பேசியுள்ளேன். இதை தயவுசெய்து யாரும் முயற்சி பண்ணாதீங்க... இதில் உடல் கடுமையாக பாதிப்படையும்.

முன்னணி நடிகரான பரத், '555' படத்துக்காக கடும் உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் சிக்ஸ் பேக் முயற்சியை யாரும் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பரத் கூறும்போது, 'சிக்ஸ் பேக்' வைக்க நிறைய தியாகம் செய்யவேண்டும். நமது வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ள வேண்டும். எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் சிக்ஸ் பேக் வைக்க மெனக்கெட வேண்டும்.

நிச்சயம் நான் 'சிக்ஸ் பேக்' வைத்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், ஒருதடவை முயற்சி செய்து, அதை நடத்திக்காட்டி விட்டு, அத்துடன் அதை விட்டுவிடுங்கள். அதை தொடரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அது உடலுக்கு நல்லது கிடையாது. '555' படத்துக்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கோழிக்கறி, முட்டை, உலர் திராட்சை, பிஸ்கெட் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தேன். எனவே 'சிக்ஸ் பேக்' முயற்சி வேண்டாம்" என்று குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com