'ஆரோமலே' படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
'ஆரோமலே' படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்
Published on

'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்தார்.

இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான்.

இதனை தொடர்ந்து, கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், 'ஆரோமலே' திரைப்படம் அடுத்தம் மாதம் (நவம்பர்)7-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com