பிரதீப் ரங்கநாதனின் Dude படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் Dude படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்
Published on

லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே வணிக ரீதியாக லாபமடைந்துள்ளது. படத்தின் டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூபாய் 25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இது மைத்ரி மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் லாபமாக அமைந்துள்ளது. 2 படங்கள் மட்டுமே நடித்த பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்கியது பெரிய விஷயமாகும்.

.இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com