தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் யோகிபாபு ரஜினியின் ஜெயிலர் முதல் ஷாருக்கானுடன் ஜவான் வரை நடித்துள்ளார்
இவர் தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் சட்னி-சாம்பார் என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
இதில் வாணிபோஜன், கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்
ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வெளியிட்டுள்ளது.