2022 பிப்ரவரி மாதம், ரஷியா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது
ரஷியாவை எதிர்த்து மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது
ரஷிய-உக்ரைன் போர் 630 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
இங்கிலாந்தில் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்
டேவிட் கேமரூன் தனது முதல் அரசியல் பயணமாக உக்ரைன் சென்றார்
கேமரூன், உக்ரைன் தலைநகர் கீவில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்
கருங்கடல் பகுதியில் ரஷியாவிற்கு உக்ரைன் பின்னடைவை ஏற்படுத்தியதை கேமரூன் பாராட்டினார்
போர் பல வருடங்கள் நீடித்தாலும் உக்ரைனுக்கு, இங்கிலாந்தின் ஆதரவு தொடரும் என்றார் கேமரூன்
இங்கிலாந்தின் ஆதரவிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்