விடாமுயற்சி' பார்த்த பின் அஜித் சொன்னது என்ன? இயக்குநர் மகிழ் திருமேனி பதில்
பல தடைகளை தாண்டி நடிகர் அஜித் நடித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள், ரசிகைகள் குவிந்தனர். சில ரசிகர்கள் அஜித்தின் புகைப்படம் பொறித்த டிசர்ட் அணிந்தும் வந்திருந்தனர்.
விடாமுயற்சி' படத்தை கண்டுகளித்த பின் இயக்குனர் மகிழ் திருமேனி கூறுகையில், தமிழக மக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை என் சார்பிலும், என் குழுவின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்
டப்பிங் சமயத்தில் அஜித் சார் படத்தை பார்த்தார். அவர் வெரி ஹாப்பி என்றார். இதனிடையே, அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி மீண்டும் இணையுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சார் சொல்லுவார் என்று கூறினார்.