வீட்டின் நறுமணம் வீச செய்வது வாசனை மெழுகுவர்த்திகள்தாம். இந்த மெழுகுவர்த்திகள் அறைக்கு புத்துணர்ச்சி மற்றும் வெளிச்சத்தை தரும். நீண்ட நேரம் அறையில் வாசம் தங்க வேண்டுமென விரும்பினால், குறைந்தது மூன்று மணி நேரமாவது எரியவிட வேண்டும். மெழுகுவர்த்தி உருக உருக அறையில் வாசனை பரவத் தொடங்கும். இந்த வாசனை மெழுகுவர்த்திகள் அறையை அலங்கரிக்கவும் சிறந்தவை.
ஸ்ப்ரே
காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை 'ஸ்ப்ரே'வைப் பயன்படுத்தலாம். உணவு, செல்லப்பிராணிகளின் வாசத்தைப் போக்குவதற்குச் சிறந்தது வாசனை 'ஸ்ப்ரே'. வாசனைப் பொருட்களைப் பொறுத்தவரை, அறையில் முதலில் ஸ்ப்ரேவைப் பயன்படுத்திய பிறகு, வாசனை மெழுகுவர்த்திகள், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
எண்ணெய் எரிகருவி
எண்ணெய் எரிகருவி (Oil Burner), சிறிய மெழுகுவர்த்தி பரப்புவான் (Tea light diffuser) ஆகிய இரண்டு வாசனைப் பொருட்கள் 10-15 நிமிடங்களில் அறையின் வாசத்தை அடியோடு மாற்றக்கூடியது. இதை அறையின் அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தலாம்.
நாணல் எரிகருவி
கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் நாணல் எரிகருவி (Reed Diffuser) இயற்கை எண்ணெய்யை உறிஞ்சிய பிறகு, அதை அறையில் வாசமாகப் பரப்பும். சிறந்த நாணல் எரிகருவி, ஓர் அறையில் ஒரு மணி நேரம் வெளியிடும் வாசமானது பல நாட்களுக்கு நீடிக்கும். இந்த நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.
காற்றோட்டம், வெளிச்சம் அவசியம்
நீங்கள் எப்படிப்பட்ட வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அந்த இடத்தில் காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு சிறப்பான நறுமணப் பொருளாக இருந்தாலும், இயற்கையான வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லை என்றால் எந்தப் பலனும் இருக்காது. அத்துடன், இந்த நறுமணப் பொருட்கள் அறையில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் உதவும்.