திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன.அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
வணங்கான்' - டென்ட்கொட்டா
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் கடந்த ஜனவரி 10-ந் தேதி வெளியான 'வணங்கான்' திரைப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'டாகு மகாராஜ்' - நெட்பிளிக்ஸ்
பிரபல இயக்குநரான பாபி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள 'டாகு மகாராஜ்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
பாட்டல் ராதா' - ஆஹா தமிழ்
இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள 'பாட்டல் ராதா'. திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'செல்பி' - சிம்ப்லி சவுத்
இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'செல்பி'. இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் சிம்ப்லி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'முபாசா தி லயன் கிங்' - அமேசான் பிரைம்
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங் . இப்படம் கடந்த18-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
தி ஒயிட் லோட்டஸ்' - ஜியோ ஹாட்ஸ்டார்
சீசன் 3தி ஒயிட் லோட்டஸ் என்பது டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படமாகும். இதனை மைக் ஒயிட் எழுதி இயக்கியுள்ளார். இதன் முதல் இரண்டு சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சீசன் 3 உருவாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படம் கடந்த 17-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'சாட்சி பெருமாள்'- டென்ட்கொட்டா
உண்மை சம்பவ பின்னணியில் இயக்குநர் வி.பி.வினு இயக்கியுள்ள படம் 'சாட்சி பெருமாள்'. முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் ரங்கராஜன் நடித்துள்ள இப்படம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்துப் போடுபவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இப்படம் கடந்த 17-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.