இந்த வாரம் எந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்
விடாமுயற்சி: NETFLIX
அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
குடும்பஸ்தன்:ZEE 5
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் வரும் 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ரேகா சித்திரம்: SONY LIV
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஆசிஃப் அலி நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான ரேகாசித்திரம் திரைப்படம் வரும் 7 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சங்கராந்திகி வஸ்துனம்:ZEE 5
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான வெங்கடேஷ் நடிப்பில் உருவான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் மார்ச் 1 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தண்டேல்:NETFLIX
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா - சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் வரும் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது