சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்.கே.25 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.
அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் விஷால், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் விஷால் அதை மறுத்து கூறியுள்ளார். "வில்லனா? கண்டிப்பா நான் வில்லன் கதாப்பாத்திரத்துல நடிக்கப்போறதில்ல.
நான் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற விமர்சனம் எங்கு இருந்து வந்திருக்கக்கூடும் என எனக்கு தெரியும்.
நான் இந்த நிலமைக்கு வர 20 வருட கடின உழைப்பை போட்டுள்ளேன். வில்லனாக நடிக்க இப்போது நான் தயாராக இல்லை" என கூறியுள்ளார்.