இன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விளாசி சரித்திர சாதனை படைத்திருக்கிறார் விராட் கோலி.
உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம் அடித்த விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இளைஞன் "விராட்" எனும் வீரராக உருவெடுத்ததில் மகிழ்ச்சி-சச்சின் டெண்டுல்கர் பாராட்டு.
"ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததில் எனக்கு மகிழ்ச்சி அதிகம் தான்,அதுவும் இத்தனை பெரிய போட்டி-உலகக் கோப்பை அரையிறுதியில்-எனது ஹோம் கிரவுண்டில் முறியடித்தது கேக் மீது ஐஸ் வைத்ததை போன்று இருந்தது," என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.