போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த மாதம் சார் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் விமல் அடுத்ததாக தனது 35 வது திரைப்படமாக பெல்லாடோனா என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
விமலில் 34- வது திரைப்படமாக நடித்துள்ள பரமசிவன் ஃபாதிமா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று விஜய் சேதுபதி அவரது எக்ஸ் பக்கதில் வெளியிட்டார்.
விமலுக்கு ஜோடியாக சாயாதேவி நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.