நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதி இருப்பதாக அதை படக்குழு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.