மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்
இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது
அதனால் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 3-வது வாரத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி விடாமுயற்சி படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.