தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சில நாட்களில் வேறு இடத்திற்கு செல்ல உள்ளதாக அஜித்தின் மேலாளர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.