பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி'. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன்,மற்றும் ஆரவ் ,ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்
இந்த படத்தில் சண்டை காட்சியில் அஜித் 'டூப்' இல்லாமல் நடித்து இருக்கிறார் சமீபத்தில் அஜித்தின் ஒரு துணிச்சலான கார் 'ஸ்டண்ட்' இணைய தளத்தில் வைரலானது
இந்நிலையில் 'விடாமுயற்சி' பட தயாரிப்புக்குழு வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதிஇப்படத்தை 'ரிலீஸ்' செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.