நடிகர் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.
இந்த படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார்.
அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.