ஜெய்பீம் படத்தின்மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன்.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் நாளை [அக்டோபர் 2] வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2 மணி நேரம் 43 நிமிடம் 25 நொடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக உருவாகியுள்ள வேட்டையன் படத்துக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.