இயக்குனர் ஆர். அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'வீரமங்கை வேலுநாச்சியார்' . இந்த படத்தில் வேலுநாச்சியாராக முதன்மை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆகிறார் ஆயிஷா.
வீரமங்கை வேலுநாச்சியார்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான பெரிய மருதாக இப்படத்தின் தயாரிப்பாளரும், 'தேசிய தலைவர்' திரைப்படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக நடித்திருப்பவருமான ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவரது மகள் தான் ஆயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெ.எம்.பஷீர், "வேலு நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவதில் மிகவும் பெருமை அடைகிறோம். இதில் முதன்மை வேடத்தில் எனது மகள் ஆயிஷா நடிப்பது பெரும் மகிழ்ச்சி" என்றார்.