தமிழ் சினிமாவுக்கு தனித்துவமான படங்களை கொடுத்த பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான்.
இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வணங்கான் படம் அடுத்த ஜனவரியில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதைப் படக்குழு அறிவித்துள்ளது.