மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
படம் நாளை வெளியாக உள்ளது இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்தது.
அதில் வாழை படத்தை பார்த்து விட்டு சோகத்துடன் வெளியே வந்த இயக்குநர் பாலா, மாரிசெல்வராஜை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து சிறிது நேரம் மாரி செல்வராஜ் பக்கத்தில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தினார்.
மேலும் நடிகர் சிலம்பரசன், சிவகார்த்திகேயன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரும் படம் குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.