ஒரு டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின்னர் தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தை வெட்டி அதனைக் கொண்டு நேரடியாக முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.
பச்சை பயறை அரைத்து மாவு செய்து, அந்த மாவைக் கொண்டு தினமும் முகத்தை தேய்த்து கழுவி வர, மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.
க்ரீன் டீயின் பையில் உள்ள பொடியைக் கொண்டும் கரும்புள்ளிகளை அகற்றலாம். அதற்கு க்ரீன் டீ பொடியில் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வேர்க்கடலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, மூக்கின் மேல் தடவி மென்மையாக 10 நிமிடம் ஸ்கரப் செய்து, பின்னர் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கி, பொலிவோடு காணப்படும்.
ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு தோலின் பொடியை எடுத்துக் கொண்டு, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ , மூக்கில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.
வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தேனைத் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் வெள்ளைப்புள்ளிகள் நீங்கி, சருமம் பட்டுப்போன்று மென்மையாகும்.