8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள், குட் நைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன்.
இவர் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி லவ்வர் படத்தை பார்த்துவிட்டு மணிகண்டனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியுள்ளார்
இதனை தனது வலைதளத்தில் பகிர்ந்து கொண்ட மணிகண்டன் “தொலைபேசியில் அழைத்து என்னை வாழ்த்தியதற்கு நன்றி உதயநிதி சார். இது இன்னும் சிறந்த கதாபாத்திரங்களை செய்ய எனக்கு ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்