இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தக் லைஃப்.
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் சிம்பு இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியதாக அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
தற்பொழுது படத்தில் நாசர் மற்றும் அபிராமி நடிப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.