சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
கோதுமை அல்வா செய்யும் போது, வெந்நீர் தெளித்து, நெய் கலந்து கிளறினால், அல்வா சுவையும், மணமும் கூடும்.
சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக்கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.