தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்
இப்படத்தினை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டார் அதில், "ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து 'கேப்டன் மில்லர்' என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நன்றி உதயநிதி ஸ்டாலின். நீங்கள் விரும்பும் கலையை பாராட்ட தவறுவதில்லை. இந்த பாராட்டு எனக்கும் படக்குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.