நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தி கோட் படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்று வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.