நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்
இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்
இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்தது
இந்நிலையில் இப்படத்தில் 2 பாடல்களை விஜய் பாடியுள்ளதாக யுவன் சங்கர் ராஜா அப்டேட் கொடுத்துள்ளார் இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.