மொழி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “தி கோட் லைஃப்”
ஆறு வருடங்களாக படப்பிடிப்பு நடந்த இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடையை குறைத்து நடித்துள்ளார்
இப்படத்தின் பிரீமியர் ஷோ பார்த்து நடிகர் கமல்ஹாசன் உட்பட பலர் பாராட்டிய நிலையில், கடந்த 28ம் தேதி தமிழ், இந்தி, மலையாளம் உட்பட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது
இந்நிலையில் 4வது நாளாக திரையரங்குகளில் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இப்படம் தற்போது வரை 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.