வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 69" என தலைப்பிடப்பட்டு உள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
பாபி தியோல் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ நடிப்பதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தற்பொழுது படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.