இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார்.
"தளபதி 68" என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு, வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பாங்காக் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், படத்தின் தலைப்பு Boss (or) Puzzle என டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகின
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், எல்லா அப்டேட்டுகளையும் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். தளபதி 68 படத்தின் டைட்டில் Boss (or) Puzzle கிடையாது என்று பதிவிட்டிருக்கிறார்.