இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
"தளபதி 68" என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.