தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஏவுதளங்களில் சுமார் 250 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன
நாங்களும் ராணுவமும் பாதிக்கப்படக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி எச்சரிக்கையாக இருக்கிறோம்
கண்காணிப்பு பணிகள் அங்கு தீவிரப் படுத்தப் பட்டுள்ளன எந்த ஊடுருவல் முயற்சியையும் முறியடிக்க உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.