சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர்
அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்
இதனையடுத்து இவர்களின் திருமணத்திற்கு பின் 18 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
அந்த படத்தை சில்லு கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா ஷமீம் அல்லது பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.