சூர்யா சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது
ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தின் ஷூட்டிங் வெறும் அரை நாள் தான் நடந்தது. ஷூட்டிங் எடுக்கும் அன்று காலையில் தான் எனக்கு சீன் பேப்பரை கொடுத்தார் லோகேஷ்.
20 வருடங்களாக நான் என் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியை எடுக்கவில்லை. ரோலக்ஸ் ஒரு கெட்டவன் அதனால் அதில் நான் எனக்குள் இருந்த அனைத்து விதிமுறைகளையும் உடைத்து நடித்தேன்.
கமல் சார் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதற்கு முன் நடித்து முடிக்க வேண்டும் என எண்ணினேன். ஏனென்றால் அவர் முன் என்னால் நடிக்க முடியாது" என கூறியுள்ளார்.