சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சூர்யாவின் 45-வது திரைப்படமாகும் .
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கோவையில் நடைப்பெற்று வருகிறது.
படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , இந்திரன்ஸ், யோகி பாபு மற்றும் ஷிவாதா நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர்.
இதை தொடர்ந்து படத்தில் தெலுங்கு நடிகரான சுப்ரீத் ரெட்டி மற்றும் மலையாள நடிகையான அனகா மாயா ரவி இணைந்துள்ளதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்