சூர்யாவின் 44வது படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தப் படம் ரெட்ரோ என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.