ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், ஒரு கட்டத்தில் அதிலிருந்து முழுமையாக வெளியே வந்து பாலிவுட் சினிமாவில் நுழைந்தார்
தமிழில் வடகறி படம் மூலம் அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து, 'மதுர ராஜா', 'ஓ மை கோஸ்ட்', 'தீ இவன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்
இந்நிலையில் சன்னிலியோன் தற்போது தொழில் அதிபராகவும் மாறியுள்ளார் உத்திர பிரதேசத்தில் புதிய ஓட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
அட்டகாசமான பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலுக்கு 'சிக்கா லோகா' என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் இந்தியா முழுவதும் இதன் கிளைகள் தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்