இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார்
இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிம்பு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்
இது தொடர்பாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்
அதில் "சிம்பு ரசிகர்களுக்கு வணக்கம். புதிய படத்தின் அறிமுக வீடியோவை பார்த்துவிட்டு தனக்கே உரித்தான ஸ்டைலில் எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது எஸ்.டி.ஆர். தான்
ஓ மை கடவுளே பார்த்துவிட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததும் அவர்தான்" அவர் தயார் எனில் அவருடன் பணியாற்ற ரெடி என்று பதிவிட்டுள்ளார்