நடிகர் சிலம்பரசன் பத்து தல படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR48 படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் சிம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பட்சத்தில் STR 48 கைவிடப்பட்டதாக பல தகவல்கள் வெளியாகின
இந்நிலையில், இப்படத்தை குறித்து கலை இயக்குனரான எஸ்.எஸ் மூர்த்தி ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார்.
எஸ்டிஆர் 48 படத்தின் செட் போடுவதற்கான மினியேச்சர் வடிவத்திற்கான வேலைப்பாடுகள் முழு தீவிரமாக செய்து வருகிறோம். இதன் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதம் இருக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என கூறியுள்ளார்.
படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியிடப்படுல் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.