பிரபல சினிமா பட நடிகை சரண்யா பொன்வண்ணன் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார் இவர் விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்
இவரது பக்கத்து வீட்டில் இருக்கும் ஸ்ரீதேவிக்கும், இவருக்கும் இடையே காரை நிறுத்துவது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் நேற்று சரண்யா தனது காரை ஸ்ரீ தேவி வீட்டினருகே நிறுத்தியுள்ளார் ஸ்ரீதேவி தனது வீட்டின் இரும்பு கேட்டை திறந்தபோது அது அந்த காரில் உரசியது
இதனால் ஆத்திரம் அடைந்த சரண்யா பொன்வண்ணன் ஸ்ரீதேவியுடன் கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
இதையடுத்து நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் ஸ்ரீதேவி புகார் அளித்து உள்ளார்