தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் கொட்டுக்காளி
கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இப்படம் 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருந்தது. ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படமும் இந்த டிரான்ஸில்வேனியா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.