நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது.
'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார்.
'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும்' படம் வரும் 13-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.