தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'
இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க சினேகா சோனியா அகர்வால் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிைலயில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சோனியா 'புதுப்பேட்டை 2ல் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் செல்வா கூட சேர்ந்து வேலை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை' என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்