தேங்காய் மூடியை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
எந்த சட்னி செய்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணம் கமகமக்கும்.
இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் சேர்க்கவும்.
மஞ்சள் பூசணி வாங்கினால் அதை சமைத்து விட்டு நடுவில் உள்ள குடல் போன்ற பாகத்தை வீணாக்காமல் அதை எண்ணெய் விட்டு வதக்கி அத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், புளி, உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிடலாம். மிகவும் ருசியாவும் மணமாகவும் இருக்கும்.
கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை வாழை இலையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.
நெய் 'கமகம'வென மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.
ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.